Categories
மாநில செய்திகள்

2 வருடங்களுக்கு பின் மீண்டும் வண்டலூர் பூங்காவில்….. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் பார்த்து ரசித்து வந்த மீன் வடிவில் இருக்கும் மீன் அருங்காட்சியகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியத்திற்கு சென்று வண்ண மீன்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வடிவில் இருந்த மீன் அருங்காட்சியகம் ரூ.23 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு இந்த அருங்காட்சியகத்திற்குள் 28 வகையான வண்ண மீன்கள் கண்ணாடி தொட்டிக்குள் விடப்பட்டு வண்ண ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீன் வடிவில் உள்ள மீன் அருங்காட்சியகம் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பார்க்க வசதியாக திறக்கப்பட்டன.

Categories

Tech |