Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய் கூட கொடுக்காதீங்க… DMKவினர் யோக்கியர்கள் இல்லை… ஸ்டாலினை நிரூபிக்க சொன்ன பிரேமலதா ..!!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல் இன்று தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி இடுங்கள், நாங்களும் தனித்து போட்டியிடுகிறோம். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் தேர்தலை சந்திக்க உங்களுக்கு தைரியம் இருக்கா?

இவங்க ( திமுக ) வந்தா உடனே அதிமுக மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும், ஊழல் பண்ணி இருக்கார், அதை பண்ணி இருக்கார், இது பண்ணி இருக்கார் என ரெய்டு அனுப்புறாங்க. அப்போ உங்க கட்சிக்காரர்கள் எல்லாரும் யோகியர்களா ?  உண்மையாக ஆட்சியாக இருந்தால் உண்மையான மக்களுக்கான ஆட்சியாக இருந்தால் திரு ஸ்டாலின் அவர்களே… A.M, P.M முதல்வராக இருக்க நான் விரும்பவில்லை..

M.M மக்கள் முதல்வராக இருக்க விரும்புகிறேன். என்று சொல்கிறீர்களே..  உண்மையில் மக்கள் முதல்வராக நீங்கள் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா,  முதலில் ரெய்டை உங்கள் மந்திரிகளின் வீட்டிற்கு அனுப்ப தயாரா?  இன்னைக்கு ஆட்சி முடிஞ்சி வீட்டில் ஓய்வில் இருக்கிற மந்திரிகள் வீட்டிற்கு எதற்கு நீங்க ரைடு அனுப்புறீங்க ? அதுவும் ஒரே மந்திரி வீட்டுக்கு பத்து வாட்டி. அவர்கள் ஒன்னும் உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையில் நீங்கள் உத்தமர்களாக இருந்தால்,  உங்கள் மந்திரி வீட்டிற்கு முதலில் நீங்கள் ரைடு அனுப்பி, உங்களது ஆட்சி சுத்தமான ஆட்சி என்பதை மக்களுக்கு நிரூபியுங்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |