Categories
அரசியல் மாநில செய்திகள்

மாறிமாறி பேசும் தமிழக C.M… 80 இல்ல, வெறும் 8சொல்லுங்க… சீமான் சுளீர்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு முதல்வர் நான் மக்களுக்காக நிமிடத்துக்கு நிமிடம் பாடுபடுவேன் என்று சொல்கிறார். அது என்னவாக பாடுபடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும் ? அப்படி எல்லாம் பாடுபடுவதாக இருந்தால், அவர் சொல்லக்கூடாது,  நம்மளை போன்றவர்கள்,  பொதுவான மக்கள்,  எங்கள் முதல்வர் அப்படி அயராது பாடுபடுகிறார். மக்களுக்காக உழைக்கிறார்.  மக்களின் பிரச்சினைகளை எடுத்து தீர்வு காண்கிறார் என்று மக்கள் சொல்ல வேண்டும்.

அவரே மேடைக்கு மேடை நான் அனுதினமும் உழைக்கிறேன்,  நொடிப்பொழுதும் ஓய்வின்றி உழைக்கின்றேன். 80 விழுகாட்டத்தை தீர்த்துவிட்டேன், அடுத்த கூட்டத்தில்  70 விழுக்காடு தீர்த்துட்டேன் அதெல்லாம் அவர் சொல்லக்கூடாது,  நாம சொல்லணும். 80 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை முடித்துவிட்டேன் என்று தானே முதல்வர் சொல்லுறாரு என்ற கேள்விக்கு, மறுகூட்டத்தில் 70% முடித்து விட்டேன் என்று சொல்கிறார். 80 விழுக்காடு நான் கேட்கவே இல்லை. எட்டு பிரச்சனையை தீர்த்து இருக்கேன்னு சொல்லுங்க.

மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் நான் ஒன்னு கேட்குறேன், ஏன் பிள்ளைங்க எங்க படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள், அரசு கல்லூரி, எந்த கல்லூரியில்  படித்தாலும் ஆயிரம் ரூபாய் ? எவ்வளவு காசு கட்டிப் படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? என் பிள்ளைங்க கட்டணம் கட்டுகிறார்கள் அல்லவா என தெரிவித்தார்.

Categories

Tech |