Categories
அரசியல் மாநில செய்திகள்

கையை பிடிச்சி அழுத வைகோ…! அண்ணா ”அழாதீங்க” என… சமாதானம் செய்த ஸ்டாலின் ..!!

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 56 வருடமாக அவருடைய அரசியல் வாழ்வை  ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு சேர்க்க முடியாது. ஆனால் மிக சிறப்பாக மிகுந்த எழுச்சியோடு உணர்ச்சியோடு நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய தம்பி துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தலைமைக் கழகத்தின் செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை  நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். முடிந்த  உடனே அண்ணன் வைகோ கையை பிடித்து சொன்னேன், தம்பி ரொம்ப சிறப்பாக பண்ணி இருக்கிறது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் என முடிந்த உடன் சொன்னேன். “இரண்டு வருஷமா  கஷ்டபட்டான்”  என அவர் பெருமையாக சொன்னார்.

தொலைக்காட்சியில் வந்திருந்தது, கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று அவர்  ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தனது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, நமது அண்ணன் வைகோ அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும்.. கலைஞரை பார்க்க வேண்டும் என கேட்டாரு .. உடனே அவருக்கு  தலைவரிடத்தில என்ன சூழ்நிலையில் இருந்து அவரை பார்க்க வைக்க முடியும் என மருத்துவரிடம் கலந்து பேசி அதற்கு பிறகு அவரிடம்  சொல்லி அவரும் அந்த நேரத்துக்கு  வந்தார்.

அவரு வந்து அந்த மாடிப்படி ஏறி உள்ள நுழையும் போதே தலைவர் அவர்கள் அந்த ஹால்ல உட்காந்து இருக்கிறார். உடனடியாக யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத உடல்நிலை, அந்த சூழ்நிலை அவருக்கு இருக்கு. இருந்தாலும்  அவரு அந்த கருப்பு துண்ட பார்த்த உடனே கண்டுபிடித்து சிரித்தார், வந்தவுடனே  கையை நீட்டினாரு, உடனே வைகோ அவர்கள் ஓடி வந்து கலைஞரின் கையை பிடிச்சிகிட்டு  அழ ஆரம்பிச்சிட்டாரு.  நான் பக்கத்தில் இருந்து தட்டிக் கொடுத்து அண்ணா அழாதீங்க என சமாதானப்படுத்தினேன்.  இன்னும் அந்த காட்சி எனக்கு பசுமையாக இருக்கிறது என நினைவுகூர்ந்தார்.

Categories

Tech |