Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அதிமுக கிடையாது…! சாவியை கொடுக்க முடியாது… எழுதி கொடுத்த ஈபிஎஸ் ..!!

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழு நடந்த பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது வன்முறை என்பது ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மூடி இருந்தார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த சாவியானது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு:

இதற்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த மனு மீது பதிலளிக்குமாறு எதிர்மனுதாரர்களான கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கக்கூடிய சூழலில், இபிஎஸ் சார்பில் நேற்று பதில் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

ஓபிஎஸ் அதிமுக இல்லை:

அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது ஓபிஎஸ் என பகிரங்கமாக கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். மிக முக்கியமான ஒரு விஷயமாக இதனை பார்க்க வேண்டி இருக்கிறது. ஓபிஎஸ் அவர்கள் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அப்படி இருக்கும்போது அவரிடம் சாவியை எப்படி ஒப்படைப்பது என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் ?

சாவியை கொடுக்க முடியாது:

மேலும் அவர் உறுப்பினராக இருந்தபோது, அதிமுகவின் தலைமை அலுவலகத்தை சூறையாடி இருக்கிறார். உள்ளே இருந்து நிலைய பொருட்கள் காணாமல் போயிருக்கின்றது. கடுமையான வன்முறையை ஈடுபட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரிடம் சாவியை ஒப்படைப்பதா ?  அலுவலக த்தை ஒப்படைப்பது என்பது முடியாது, கூடாது எனவும்  திட்டவட்டமாக தனது பதில் மனுவில் கூறியிருக்கிறார்.

மனு தள்ளுபடி:

ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் அவர்களுக்கும்,  அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது அப்படி தொடர்பில்லாத ஒருவர் அதிமுகவின் அலுவலக சாவியை கேட்பது என்பது சரியானது அல்ல எனவே அவர் தாக்கல் செய்திருக்கக்கூடிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என அந்த பதில் மனுவில் இபிஎஸ் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

வருவாய் கோட்டாட்சியர்;

வருவாய் கோட்டாட்சியர் சார்பாகவும் தனியாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், அந்த சமயத்தின் போது என்னென்ன மாதிரியான விஷயங்கள் எல்லாம் ஏற்பட்டது உள்ளிட்டவற்றையெல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில்  கூறி அந்த அடிப்படையில் தான் சாவி இபிஎஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்ட விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றப்படுகிறது என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.

பின்னடைவு:

எனவேஇன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா ? அல்லது ஓபிஎஸ் அவர்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த  போகிறதா ? என்பதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அதைவிட முக்கியமானது அதிமுகவிற்கும் ஓபிஎஸ்சுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது என்பதை எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பது உன்னிப்பாக கவனிக்க வேண்டியது. அதே நேரத்தில் அதை முக்கியமான விஷயமாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது.

Categories

Tech |