விஜய் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீயா? நானா? நிகழ்ச்சி ஒளி பரப்பப்படுகிறது. இதை ரசிகர்களும் பார்த்த மகிழ்ந்து வருகின்றனர். அதன்படி கடந்த வார ஞாயிறு அன்று சிறப்பான தலைப்புடனே நீயா நானா நிகழ்ச்சி களமிறங்கியது. அதன்படி கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள். இந்த மாற்றத்தை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது? என்ற தலைப்பில் தொடங்கியது. இதில் தன்னுடைய குழந்தையின் ரேங்க் அட்டையை படிக்காத தன்னுடைய கணவன் ஒரு மணி நேரம் எழுத்துக்கூட்டி படிப்பதாக அதிகம் படித்து வேலைக்கு சென்று சம்பாதிக்கும் மனைவி கூறுகிறார்.
தான் அதிகமாக மதிப்பெண் எடுக்காததால் தான் பிள்ளை எடுத்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்து அவ்வளவு நேரம் பார்ப்பதாக.அந்த தந்தை கூறுகிறார். இதையடுத்து இந்த அப்பா தனக்கு காவியமாக தெரிவதாக குறிப்பிட்ட கோபிநாத் நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் பரிசை இடையிலேயே அந்த நபருக்கு கொடுத்து பெருமைப்படுத்துகிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த தந்தையின் மகள் என்னுடைய அப்பா தோற்கவில்லை ஜெயித்துவிட்டார் என்று கூறும் பொழுது அனைவருடைய கண்களையும் குளமாக்குகிறது.