கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது.
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரூபாய்.125 கோடி விலை கொடுத்து அமேசான் ஓடிடி தளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் இதுவரையிலும் இவ்வளவு பெரிய விலை கொடுத்து எந்த படமும் வாங்கப்பட்டதில்லை எனவும் கூறப்படுகிறது.