கடந்தாண்டு இறுதியில் அதிமுகவினுடைய உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் பிறகு மற்ற நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு செல்லாது என்றும், அதிமுக உட்கட்சி விதிகளுக்கு முரணாக தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி கே.சி பழனிசாமியின் மகன் சுரேன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனு தாக்கல் செய்திருந்தபோதே, அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர் அனுமதிக்க வேண்டுமென்று கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இருவரும் அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகு அவர்கள் இருவரும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்த இருவருக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும், தனி நீதிபதி உத்தரவு அதிமுக விதிகளுக்கு முரணாக இருக்கின்றது. விதிகளுக்கு உட்பட்டு தான் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினராக அல்லாத இருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்ற வாதத்தினை உள்ளடக்கி அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் எடப்பாடி தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். பழனிச்சாமி எடப்பாடி பழனிச்சாமி தொடந்த மேல்முறையீடு மீதான வழக்கின் இறுதி விசாரணைக்காக அக்டோபர் மாதம் வழக்கை தள்ளி வைத்திருக்கிறார்.