Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு கீழுள்ள…… கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரும் மனு…. தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுள் மறுப்பு, சுயமரியாதை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடிய ஈ.வே.ராமசாமி பெரியாரின் சிலைகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்தும் விடுவதாக இருக்கிறது என்றும், கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா? என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேள்வியெழுப்பினார். இதையடுத்து பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |