Categories
ஆன்மிகம்

இந்த ரகசியங்களை மட்டும் யாரிடமும் கூறிவிடாதீர்கள்.. சாணக்கியன்..!!

யாரிடமும் சொல்லக்கூடாத  நான்கு ரகசியங்கள்:

கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தன்னுடைய நூல்களின் வாயிலாக எல்லா காலத்திற்கும் பொருந்தும் வழியாக நிறைய வழிகளை சொல்லி விட்டு சென்றிருக்கிறார். சாணக்கியன். அதில் முக்கியமான அறிவுரை யாரிடமும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்.

இவர் சொல்ற இந்த நாலு ரகசியங்களை நீங்க மத்தவங்க கிட்ட சொல்லும் பொழுது உங்கள் வாழ்க்கையோட மகிழ்ச்சியை இழந்து ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

பண கஷ்டம்:

உங்களுக்கு ஏற்படும் பண கஷ்டத்தை எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்களிடம் சொல்ல கூடாது.  உங்களுடைய கஷ்டத்தை கேட்கும்பொழுது ரொம்ப அக்கறையா இருக்க மாதிரி பேசுவாங்க, அது பெரும்பாலும் நடிப்பா தான் இருக்கும்.ஆனா உங்களோட கஷ்டத்தை உங்களுக்குள்ளேயே வச்சுக்கிட்டு அதை சரி பண்ண முயற்சிக்கவும்.

தனிப்பட்ட பிரச்சனைகள்:

உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகள், தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். அப்படி சொல்லும்பொழுது பெரும்பாலும் உங்ககிட்ட ஆறுதல் சொன்னாலும், பின்னால உங்கள பத்தி கேலி இல்லை கிண்டல் தான் செய்வார்கள். அதுமட்டுமில்லாம உங்களோட ரகசியங்கள் வெளியே தெரிய வரும்பொழுது அதனாலேயே உங்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும்.

இதில் முக்கியமான விஷயம் உங்களுடைய ரகசியங்களை உங்களாலேயே பாதுகாக்க முடியலனா மத்தவங்க எப்படி ரகசியமாக வைத்திருப்பார், என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

மனைவியை பற்றி மற்றவரிடம் பேசவேண்டாம்:

மனைவியை பற்றி  நல்லதோ, கெட்டதோ அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாது. அப்படியே தன் மனைவியை பற்றி யாரிடமும் சொல்லாதவன் தான் மிகவும் புத்திசாலி. ஏன் சொல்லக்கூடாது என்றால் மனைவியை பற்றி பேசும்பொழுது நம்மையும் அறியாமல் முக்கியமான விஷயங்களை சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கிறது.  இதனால் உங்களோட குடும்ப மகிழ்ச்சி சீர்குலைய நேரிடலாம்.

அவமானம்:

அவமானம் நம்ம தகுதிக்கு கீழ இருக்கவங்க நம்மல அவமானம் படுத்திட்டாங்கன்னா, எந்த காரணத்தை கொண்டும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அப்படி நீங்கள் சொல்லும் பொழுது மத்தவங்க உங்களை கேலி செய்வதற்கு நீங்களே வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த மாதிரி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அது இன்னும் உங்களுக்கு அவமானமாக தான் இருக்கும்.

Categories

Tech |