நாய்கள் கண்காட்சியில் 56 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டது.
சென்னை மாநகரில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கிளப்பின் தலைவரான சுதர்சன் மற்றும் செயலாளரான சித்தார்த்தா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இதில் நடுவர்கள் முன்னிலையில் நாய்கள் உரிமையாளர்களுடன் ஒய்யாரமாக நடந்து சென்றன. இந்த போட்டியில் 56 க்கும் அதிகமான நாய் வகைகள் பங்கேற்றுள்ளன. அதில் ராஜபாளையம், முதுல் அவுண்டு, கோம்பை, கேரள அவுண்டு, சிப்பிப்பாரை, கன்னி, பாஸ்மி போன்ற உள்நாட்டு நாய் வகைகளும் கலந்து கொண்டது. அது மட்டுமல்லாமல் 565 போட்டியாளர்கள் தங்களது நாய்களுடன் போட்டியில் பங்கேற்று உள்ளனர்.
மேலும் இதில் சர்பியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று நடுவர்களும் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நடுவர்களும் போட்டியின் முடிவை அறிவித்துள்ளனர். அதேபோல் கேரட் வெள்ளரிக்காய் உண்ணும் இந்தியன் ஸ்பிட் வகை நாயும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் பனி பிரதேசத்தில் வாழும் சைபீரியன் ஹஸ்கி வகை நாய்களும் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சிறந்த நாய்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், த.மு.அன்பரசன் மற்றும் இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியுள்ளனர்.