தமிழக திமுக தலைமை கழகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவின் போது வெளியிடப்படுகிறது. இந்த விழா வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக 144 பக்கங்கள் கொண்ட திராவிட மாடல் கொள்கை கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் பல்வேறு கூட்டங்களில் முதல்வர் உரையாற்றிய மையக்கருத்துகள் இடம் பெற்றிருக்கும். இந்த புத்தகத்தை கலகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிடப் போகிறார். அதன்பின் கழகப் பொருளாளரும், மக்களவைப் பொதுச் செயலாளருமான டி.ஆர் பாலு முதல் நூலை வாங்கிக் கொள்கிறார். மேலும் திராவிட மாடல் புத்தகம் முதல்வர் ஸ்டாலினின் அறிவு பரிசாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.