கும்பம் ராசி அன்பர்களே, இன்று இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி ஏற்படும் நாளாகவே இருக்கும். உத்தியோக மாற்றம், உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்ததை கொடுக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கைகூடும், வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும், எதையும் சாதிக்கும் திறமை இருக்கும்.
இன்று சாமர்த்தியத்தால் காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமே. பித்தம், கண் நோய் போன்றவை உங்களுக்கு ஏற்பட்டு பின்னர் சரியாகும். திடீர் கோபம் ஏற்படும் , கூடுமானவரை பொறுமையாக இருங்கள், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், மாணவர்கள் இன்று கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், படிதத்தை எழுதி பாருங்கள். ஓரளவு சிறப்பை கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்