சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எஸ்பிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அண்மையில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி மத்திய அரசின் நாறி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வருகிறது. இந்த கடனை பெறுவதற்கு உத்திரவாதம் எதுவும் தேவையில்லை எனவும் கூறப்பட்டது. இந்த பொய் செய்தியை சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பெண்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இல்லாத அரசு திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பி வருகின்றன . இது போன்ற மோசடி கும்பல்களை யாரும் நம்ப வேண்டாம், எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது.எனவே எஸ்பிஐ வங்கி பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.