Categories
தேசிய செய்திகள்

இனி ஒரு SMS போதும்…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் சேவையை பயன்படுத்தி பாஸ்டேக் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் என்பதை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதற்கான பரிவர்த்தனை.இதில் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் தொகையில் டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு கொண்டே வரும். எனவே அவ்வப்போது உங்கள் பாஸ் டேக் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வது அவசியம்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் ஐ பயன்படுத்தி பேலன்ஸ் தெரிந்து கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 7208820019 என்ற எண்ணுக்கு FTBAL என்று டைப் செய்து எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும். ஒருவேளை உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்டெக் இருந்தால் உங்களின் மொபைலில் இருந்து மேற்கண்ட எண்ணுக்கு FTBAL என்ற முறையில் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உடனடியாக உங்களின் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பது திரையில் தோன்றும்.

Categories

Tech |