தேர்வு எழுதுவதற்காக வெள்ளப்பெருக்கில் ஆற்றை கடந்த மாணவி மூழ்கி விடாமல் அவரின் சகோதரர்கள் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆந்திர மாநிலம். விசாகப்பட்டினம் மரிவலசை கிராமத்தில் வசிக்கும் மாணவி தத்திக்கலாவதி இவருக்கு சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தேர்வு இருந்தது. இந்நிலையில் தேர்வு எழுத செல்ல முடியாத அளவிற்கு மழை பெய்தது. அந்த பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கு சம்பாவதி ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.
https://twitter.com/KP_Aashish/status/1568448339078967301
இந்நிலையில் தேர்வு எழுதுவதற்காக தங்களது சகோதரி விசாகப்பட்டினம் செல்ல வேண்டும் என்ற நோக்கில் அவரது சகோதரர்கள் நீச்சல் தெரியாமலேயே உயிரை பணயம் வைத்து மாணவியை தூக்கி சென்று ஆற்றை கடக்க வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.