கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்திய காரணத்தினால் சகோதரிகள் இருவரும் 11வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா நகரில் வசித்து வரும் சுதா என்பவர் கணவர் இறந்த நிலையில் தனது இரு மகள்களையும் தனியாக படிக்க வைத்துள்ளார். இவர்களின் இரு மகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட அவரது தாயார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் சகோதரிகளுக்கு விருப்பமில்லை. இந்நிலையில் நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11 வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இருவரும் கீழே குதித்துள்ளனர்.
அவர்களை வீட்டில் காணாமல் தவித்த தாய் சுதா வெளியில் வந்து தேட ஆரம்பித்துள்ளார். அப்போது சகோதரிகள் இருவரும் காயப்பட்டு கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் இருவரும் டெல்லி சப்தர் ஜங்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூத்த சகோதரி உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு சகோதரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக திருமணம் செய்து வைக்க சுதா முடிவு செய்துள்ளார். ஆனால் அது பிடிக்காமல் சகோதரிகள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.