Categories
சினிமா தமிழ் சினிமா

கோபி அண்ணா சூப்பர்….! ஒரு அப்பா என்றுமே தோற்க முடியாது…. பிரியா பவானி சங்கர் போட்ட பதிவு….!!!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கணவரின் இயலாமையை கேலி செய்யும் மனைவியிடம் அறியாமை தவறில்லை என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் அந்த மனைவியிடம் கணவருக்காக பரிந்து பேசுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய்.

உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Categories

Tech |