தமிழகத்தில் எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு பேசிய அவர்,இந்தத் திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும்.சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.மாநிலத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.