அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களுக்கே அடையாளம் தெரியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தது திமுக தான்.ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் பொய் சொல்கிறார். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இதுதான் திராவிட மடல். அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என ஸ்டாலின் கூறுகிறார். எனக்கு எல்லா எம்எல்ஏக்களும் அடையாளம் தெரியும். ஸ்டாலினால் காகிதம் இல்லாமல் திமுக எம்எல்ஏக்களின் பெயர்கள் கூட தெரியாது. மேடையில் உள்ள கூட்டத்தில் என்னை நசுக்கி எடுக்கின்றனர். அதுபோல அவரைப் பார்க்க முடியுமா, அவரை ஒரு நசுக்கு நசுக்கினால் முடிந்துவிடும் என இபிஎஸ் கூறியுள்ளார்.