Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம்”…. 30-ஆம் தேதியே கடைசி…. ஆட்சியர் தகவல்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்புவோர் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பத்துடன் கடை அமைய உள்ள இடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் ப்ளூ பிரிண்ட், அதற்கான ஆதாரம், வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமை காட்டும் ஆவணம் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக அரசு கணக்கில் ரூபாய் 500 செலுத்த வேண்டும். குடும்ப அட்டை, வரி ரசீது, தங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டதா உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைன் மூலமாக தெரிவிக்கப்படும் என்ன மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |