Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..தொல்லைகள் நீங்கும்..உதவிகள் யாருக்கும் செய்யாதீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும், கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் கூடும்.

விருந்தினர் வருகை, குடும்பத்துடன் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு கொஞ்சம் கூடும். சில்லறை சண்டைகள் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் உருவாகலாம், பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் வழிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி கொஞ்சம் ஏற்படலாம். எதிலும் கவனமாக இருங்கள், கோபத்தை முற்றிலும் இன்று தவிர்ப்பது நல்லது.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் முழுமையாகவே கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |