ஸ்ரீனாத் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. சாந்தினி, மைம் கோபி, தொகுப்பாளர் ஆஷிக், நாஞ்சில் விஜயன், பூ ராமு, இந்துமதி, ஸ்ரீ ரஞ்சனி, பேபி கிருத்திகா என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். தனது முதல் படமான ‘உனக்கென வேணும் சொல்லு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குநர் ஸ்ரீனாத், படத்தின் கதைக்களம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் நடக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
படத்தின் கதையை நாய் கூறுவதுபோல் இயக்குநர் அமைத்துள்ளாராம். இப்படத்திற்கு பிசாசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here’s the motion poster of a sweet film that’s gonna hit the screens soon https://t.co/ifj5Pz3TJE#AnbullaGhilli #Motionposter#அன்புள்ளகில்லி@PentelaSagar@balasubramaniem @SrinathRavanaa@MasterChannel27@riseeastcre@ArrolCorelli@DoneChannel1@sureshchandra
— Arya (@arya_offl) February 16, 2020