ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் வடிவேலுவால்தான் பெரிய ரவுடியானார்கள் என கூறி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் வடிவேலு. மீம்ஸ் என்றாலே வடிவேலுவின் காமெடி இல்லாமல் இருக்காது. இந்த நிலையில் வடிவேலு தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதற்காக ரசிகர்கள் வடிவேலு ஜோக்ஸ் வீடியோ, மீம்ஸ் உள்ளிட்டவற்றை இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் ஒரு மீம்ஸில் ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் தூங்கிக் கொண்டிருந்த வடிவேலை தூக்கிச் சென்று தான் பெரிய ரவுடி ஆனார்களாம். வடிவேலு சினிமாவில் இல்லாமல் இருந்த வருடங்களில் அவரின் மீம்ஸ் இணையத்தில் தெறிக்க வைத்து விட்டுக் கொண்டே தான் இருந்தது. இந்நிலையில் ரசிகர்கள் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் மீம்ஸ்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வருகின்றார்கள்.
https://twitter.com/sottakanth/status/1557323653850624000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1557323653850624000%7Ctwgr%5Edc187c668a15bdce916d382afc7af824b7b6969f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fhappy-birthday-vadivelu-wishes-pour-in%2Farticleshow%2F94144679.cms