உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பலியா மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது. அப்போது மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இத்தகைய சூழ்நிலையில், ‘என்ன செய்வதென்று அறியாத மருத்துவர்கள் டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
அங்கு ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. ஆனால் அதனுடைய பேட்டரி உரிய நேரத்தில் செயல்படவில்லை. பேட்டரியை சிலர் திருடிச் செல்வதால், அதனை மறைத்து வைத்து பொருத்த வேண்டியுள்ளது. அதனால் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.