Categories
தேசிய செய்திகள்

‘அது ஒரு கோரிக்கை திட்டம், தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறோம்’: நிர்மலா சீதாராமன்..!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கோரிக்கையின் அடிப்படையில் தொடர்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரவு-செலவு திட்ட நிநிதிலை அறிக்கையை நாடாளுமன்றத்தின இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கடந்த நிதியாண்டை காட்டிலும் தற்போது நிதி ரூ. 8 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதி செலவு மதிப்பீடு ரூ.71 ஆயிரம் கோடியாக இருந்தது. அது தற்போது (2020-21) ரூ.61,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நிதியை குறைக்கவில்லை. இது ஒரு பெரியதொகை. இத்திட்டத்தில் நிதி மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கோரிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

கோரிக்கையும் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் தொடரும்” என்றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினால் 13 கோடி கிராமப்புற மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பது கவனிக்கதக்கது.

Categories

Tech |