Categories
டெக்னாலஜி

இணையமே இல்லாமல்…. இமெயில் சேவை யூஸ் பண்ணலாம்….. எப்படி தெரியுமா….???

பொதுவாக இணையம் இல்லாமல் மெயில் போன்ற இணையவழி டிஜிட்டல் பணிகளை செய்ய முடியாது. அதனால், பல நேரங்களில் முக்கியமான மெயில்களை மறந்துவிட்டு அவதி பட்டு கொண்டிருப்போம். ஆனால், இணையம் இல்லாமலேயே மெயில் சேவையை குறிப்பிட்ட அம்சங்களோடு பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பை கூகுள் வழங்குகிறது. டெஸ்க்டாப் மூலமாக மெயில் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த அம்சம் இருக்கிறது.அதற்கான வழிமுறிகளை காண்போம். முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் கூகுள் க்ரோம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஜிமெயில் செட்டிங்ஸ் பகுதிக்குள் நுழையவும். ஆல் செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் ஆஃப்லைன் டேப் பகுதியில் நுழையவும். பின்னர் Enable offline mail என்ற ஆப்ஷனை துவங்கி விடவும்.
பின்னர் நீங்கள் செய்த மாற்றங்களை Save Changes கொடுத்து சேமித்து விட்டு வெளியேறவும். Gmail > Settings > all settings > offline tab > enable offline mail > save changes இதற்கு பிறகு ஜிமெயில் உங்களின் பழைய மெயில் மற்றும் தகவல்களை offline பகுதியிலும் சேமித்து வைத்து கொள்ளும். எனவே, இணையம் இல்லாத நேரங்களிலும் நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தலாம்.

மேலும் உங்களுக்கு வரக்கூடிய புதிய மெயில்களும் உங்களிடம் இணையம் இல்லாத அல்லது தடைபட்ட சமயங்களிலும் வந்து கொண்டிருக்கோம். ஆனால், அவற்றில் ஏதாவது பெரிய தரவு கோப்புகள் இருந்தால் அதை டவுன்லோட் செய்ய முடியாது. மேலும் நீங்கள் உங்கள் இன்பாக்ஸை க்ரோமில் புக்மார்க் செய்து வைத்து கொண்டால் இணையம் துண்டிக்கப்பட்ட பிறகும் தேடுதளத்துக்கு அருகில் உள்ள ஸ்டார் ஐக்கான் மூலம் உங்களால் சுலபமாக இன்பாக்ஸை பயன்படுத்த முடியும்.

Categories

Tech |