பிரதமர் மோடியின் பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களின் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என தேசிய நவீன கலைக்கூடம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவு பொருள்களின் மின்னணு ஏலம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பேசிய என் ஜி எம் ஏ இயக்குனர், எங்களிடம் 1200 பொருட்கள் உள்ளன. அவை அனைத்தையும் காண்பிப்பது கடினம் .
அதனால் 100 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான 300க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தின் மூலம் வருகிற 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலதரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடம் பெறுகிறது.