தமிழக முழுவதும் கபடி மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் மாதம் முதல் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கபடி போட்டிகளுக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் பிற போட்டிகளுக்கான முன்பதிவு படிப்படியாக தொடங்க உள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட பல போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
அது மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு போட்டிகள் மூலம் பரிசுகளும் வழங்கப்படும்.முதன்முறையாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவினருக்கு நடத்தப்பட உள்ளது.இதில் இருபாலரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.