Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வில்லங்கச் சான்று பார்வையிட புதிய நடைமுறை…. பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வில்லங்க சான்றிதழை பார்வையிட புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வசதியை சில தனியார் செயலிகள் முறை இன்றி பயன்படுத்தி வருகின்றன.இந்த செயலிகள் மூலம் வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கும் விதமாக ஒரு புதிய செயல்முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அவ்வகையில் வில்லங்க விவரங்களை பார்வையிட விரும்புவோர் ஒருமுறை உள்நுளையும் குறியீட்டை பயன்படுத்தி பார்வையிட முடியும். மேலும் சொத்து ஆவணங்கள் பதியப்படும்போது ஆவண பதிவுக்கு அதிக நேரம் ஆவதை தடுக்கும். ஆவண பதிவுகள் மற்றும் பதிவு சார்ந்த சேவைகளை எவ்வித சிக்கலும் இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அரசை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் இந்த புதிய வசதியை பயன்படுத்தி வில்லங்க விவரங்களை பார்வையிட இந்த நடைமுறை வசதியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |