அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மு க ஸ்டாலின் 15 ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார்.