Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஊஞ்சல் அம்மன் கோவிலில் குடமுழுக்கு” திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  தண்ணீர்குன்னம் கிராமத்தில் ஊஞ்சல் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதற்காக கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக கணபதி பிரார்த்தனை, நவகிரக ஹோமம், நாடிசந்தனம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |