Categories
ஆட்டோ மொபைல்

HERO ஸ்கூட்டர் குறித்து இணையத்தில் லீக் ஆன விவரங்கள்…. எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

Hero மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்நிலையில் புதிய Hero ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110  இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன், X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை வெளிபடுத்தும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டெலிஸ்கோபிக் போர்க், எல்இடி இலுமினேஷன், ப்ளூடத் கனெக்டிவிட்டி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சிங்ரிவ் ரியர் ஷாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. Hero நிறுவனம் புது மேஸ்ட்ரோ சூம் 110 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய மேஸ்ட்ரோ சூம் 110 விலை 75,000 ரூபாய், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டலாம்.

Categories

Tech |