மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித்ஷா அணியும் மப்ளரின் விலை ரூபாய்.80,000 ஆகும். அமித்ஷா உட்பட பாஜக தலைவா்கள் பலா் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகளை அணிகின்றனா் என காங்கிரஸ் விமா்சித்துள்ளது. முன்பாக இந்திய ஒற்றுமை நடைப் பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ரூபாய்.41,000 விலையுள்ள டி-சா்ட்டை அணிந்துள்ளாா் என பாஜக விமா்சித்தது. இதுகுறித்து பாஜக-வின் அதிகாரபூா்வ டுவிட்டா் பக்கத்தில் “பாரதம் பாா்த்துக் கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு படம் பதிவேற்றப்பட்டது.
அவற்றில் ஒரு பக்கத்தில் ராகுல்காந்தி வெள்ளை நிற டி-சா்ட் அணிந்து யாத்திரையில் பங்கேற்ற படம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு புறம் அவா் அணிந்துள்ள பா்பொ்ரி பிராண்ட் டி-சா்ட் படம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழே விலை ரூபாய்.41,257 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் பேசியதாவது “ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தால் பாஜக-வுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ராகுலுக்கு மக்கள் அளித்துவரும் சிறப்பான வரவேற்பால் பாஜக-வினருக்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
உள் துறை அமைச்சா் அமித்ஷா அணியும் மப்ளா் விலை ரூ.80,000 ஆகும். அமித்ஷா உட்பட பா.ஜ.க தலைவா்கள் பலா் அணியும் கண்ணாடிகள் ரூ.2.5 லட்சம் விலை உடையதாகும். இவ்வளவு விலைகொடுத்து தங்களுக்கு பொருள்களை வாங்கிக் கொள்ளும் கட்சியினா்தான் ராகுல்காந்தியின் டி-சா்ட் விலை பற்றி பேசுகின்றனா். ராகுல் அணியும் உடையை வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு அவா்கள் தாழ்ந்து விட்டனா். பிரதமா், உள்துறை அமைச்சா் என பாஜக-வில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூட தங்களது பணிகளைக் கவனிக்காமல் ராகுல்காந்தியை விமா்சிப்பதை வேலையாகக் கொண்டுள்ளனா்” என்று அசோக் கெலாட் கூறினார்.