தெலுங்கு திரையுலகம் மீது நடிகை அமலாபால் பல்வேறு புகார்களை முன் வைத்திருக்கிறார். அண்மையில் நடிகை அமலாபால் பேட்டி ஒன்றில் கூறியதாவது “நான் தெலுங்கில் நடிக்க சென்றேன். அப்போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களின் பிடியில் இருப்பது எனக்கு புரிந்தது.
தெலுங்கில் நான் நடித்த திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு திரைப்படத்திலும் 2 கதாநாயகிகள் இருப்பார்கள். அந்த கதாநாயகிகளை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகத் தான் என்னால் தெலுங்கில் நிலைக்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.