Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதி கவிழ்ந்த லாரி…. காயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்ற ஓட்டுனரான செந்தில்குமார் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் முதல் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் 7 பயணிகள், லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 10 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |