Categories
உலக செய்திகள்

மறைந்த மகாராணி எலிசபெத்…. வழிகாட்டி கருவியாக இருந்தார்…. புகழாரம் சூட்டிய இளவரசர் ஹாரி…..!!

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக இளவரசர் ஹாரி (Prince Harry) புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்திலிருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நாட்டில் குடிபெயர்ந்துள்ளார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகின்றார். இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மறைந்த தனது பாட்டியும், ராணியுமான எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து தங்கள் ஆர்க்வெல் இணையதளத்தில் அவர் கூறியதாவது, ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை மற்றும் கண்ணியத்துடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ராணுவ தளபதியாக ராணியை முதன்முதலில் சந்தித்தது, தனது அன்பான மனைவியை ராணி முதன்முதலில் சந்தித்து, அன்பான கொள்ளுப் பேரக்குழந்தைகளை (தனது குழந்தைகள்) கட்டிப்பிடித்த முதல் தருணம் போன்றவற்றை குறிப்பிட்டும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

Categories

Tech |