Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்” அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மாணவி ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்ற மாணவியையும், வாலிபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெயிண்டரான ரங்கநாதன்(26) என்பது தெரியவந்தது. இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ரங்கநாதன் மாணவியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |