Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்யப்படுகிறதா….?? அதிகாரிகளின் அதிரடி சோதனை…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 4 இறைச்சி கடைகளில் இருந்து அதிகாரிகள் 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

அந்த இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஆட்டு இறைச்சி தான் விற்பனை செய்யப்படுகிறதா? அல்லது மாட்டு இறைச்சியை கலந்து வைத்துள்ளனரா? என அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பழைய இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

Categories

Tech |