அண்ணியை ஆபாசமாக படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரிபாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நூல் மில்லில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது அண்ணன் முறையான சித்தப்பா மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அண்ணியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு தெரியாமலேயே செல்வகுமார் அவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து உல்லாசத்திற்கு வருமாறு தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த அண்ணன் செல்வகுமாரை கண்டித்துள்ளார்.
அப்போது நான் அப்படிதான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என செல்வகுமார் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆபாசமான புகைப்படங்களை வேறு ஒரு பெண்ணிற்கு செல்வக்குமார் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.