அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் என்ற சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் சேலம் என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார். எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர். காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மறைக்க தற்போது ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.