கடல் கடக்கும் முயற்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற அகதிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக படகுகளில் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயற்சி செய்து வருகின்றார்கள். இது போன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்கள் துயரத்தில் முடிந்து விடுகின்றது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான துணிசியாவில் உள்ள பாக்ஸ் பிராந்தியத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் இத்தாலி நோக்கி புறப்பட்டு இருக்கின்றனர். இந்த படகு துணிசியாவின் மகிதியா நகருக்கு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவர்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் துணிசியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர பணியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். இருந்த போதிலும் அதற்குள் பெண்கள் சிறுவர்கள் உட்பட 11 பேர் நீர்மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 பேர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு இருக்கின்றன. இந்த விபத்தில் 12 பேர் மாயமாகி இருக்கின்றார்கள். அவர்களின் நிலைமை என்ன என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றார்கள்.