Categories
தேசிய செய்திகள்

திடீரென காரில் பற்றி எரிந்த தீ…. உதவிக்கரம் நீட்டிய முதல்-மந்திரி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 12 மணியளவில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர்ந்து வந்தது. இதையடுத்து நள்ளிரவு இரவு 12:30 மணியளவில் விலி பார்லி எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தன் காரை சாலையில் நிறுத்திவிட்டு, அதிகாரிகளுடன் சாலையின் மறுபக்கம் ஓடிசென்றார். அங்கு தீபற்றி எரிந்த காரில் இருந்து இறங்கிய நபர் தீயை அணைக்க முற்பட்டார். இந்நிலையில் அவரை தீப்பற்றி எரியும் காரிலிருந்து விலகி நிற்கும்படி கூறிய முதல்-மந்திரி காயம் ஏதாவதுபட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்து அந்நபருக்கு உதவி செய்தார். அதன்பின் அந்த நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை முதல்-மந்திரி கேட்டார். அதில் காரை ஓட்டி வந்த நபர் தன் பெயர் விக்ராந்த் என்று கூறினார். அதனை தொடர்ந்து அந்நபரிடம் தேவையான உதவிகளை செய்யதாக கூறிய முதல்-மந்திரி, தீயணைப்புத்துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |