Categories
சென்னை மாவட்ட செய்திகள்

195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தியுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஹேமந்த்- மோகனப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் சுபிக்ஷா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுபிக்ஷாவுக்கு அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. இதனால் உலக நாடுகளின் தேசிய கீதங்களை அந்த நாட்டு மொழியிலேயே சுபிக்ஷா பாடி அசத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் திருவொற்றியூர் அரசு கிளை நூலகத்தில் வைத்து நேற்று சுபிக்ஷா உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு தனியரசு, மனிதநேயர் வரதராஜன், தொழிற்சங்க தலைவர் துரைராஜ் ஆகியோர் தலைமையில் சுபிக்ஷா காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 195 நாடுகளின் தேசிய கீதங்களை சுமார் 4 மணி நேரத்தில் பாடி அசத்தியுள்ளார். இந்த சிறுமி யூடியூப் மூலம் அந்தந்த நாட்டு தேசிய கீதங்களை அதே கம்பீரத்தில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Categories

Tech |