தடை செய்யப்பட்ட பின்னரும் பிரீ பையர் விளையாட்டு செயல்படுவது எப்படி என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ப்ரீ பயர் (Free fire) விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறை விளையாடுவது எப்படி காவல் துறையினரும் சைபர் கிரைம் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.. அதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லை எனில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என்ற கருத்தையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்..
வழக்கின் பின்னணி :
நாகர்கோவிலை சேர்ந்த ஐரிஸ் அமுதா என்பவர் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில், கடந்த 6-ம் தேதி முதல் அவரை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது அவரது மகள் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜாப்ரின் என்பவருடன் சென்றிருக்கலாம் என அவர்களது நண்பர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். வளரும் பருவத்தில் இருந்த மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் நண்பர்கள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..
எனவே காணாமல் போன மகளை மீட்டு ஆஜர் படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, இது முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒன்று. அது இலை இளம் தலைமுறைக்கு கிடைப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. பிரீ பையர் விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறை விளையாடுவது எப்படி? காவல்துறையினரும் சைபர் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.. மேலும் இது தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இல்லை எனில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டு இது தொடர்பாக விரிவான உத்தரவையும் பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.