Categories
சினிமா

நடிகர் விக்னேஷின் திருமண வரவேற்பு! நேரில் சென்று வாழ்த்து சொன்ன திரை பிரபலங்கள்…. வைரல் புகைப்படம்…!!!!

இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகி பிறகு நகைச்சுவை நடிகராக சினிமாத் துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பேதுணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் காந்த் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரி ராசாத்தி இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இவர்களின் திருமணம் அண்மையில் திருச்சியில் நடந்தது. திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஞான சம்பந்தம் உட்பட பலர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அதனை தொடர்ந்து நடிகர் விக்னேஷ் காந்த் – ராசாத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடந்தது. இவற்றில் ரமேஷ் பிரபு, ஆதி, கார்த்தி, தேவா, சுரேஷ் காமாட்சி, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல், தனஞ்ஜெயன், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன், மணி ஹுசேன், கோபிநாத், சாண்டி, தம்பி ராமையா, சமுத்திரகனி, ஆத்மிகா, கவின், அமுதவாணன், பழனி பட்டாளம், ஆதவன், இயக்குனர் கிஷோர், 2டி ராஜசேகர், சினேகா பிரசன்னா, மனோபாலா, கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன், சுந்தர் சி, ஆரி, பாலசரவணன், ஆர்த்தி கணேஷ், மகாலிங்கம், தங்கதுரை, அந்தோணி தாசன், பாலா, தீபக் போன்றோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Categories

Tech |