Categories
சினிமா

நடிகைகள் ஒல்லியாக தான் இருக்க வேண்டுமா?….. கேள்வி எழுப்பிய அபர்ணா பாலமுரளி…..!!!!

தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு “சூரரை போற்றும்” படத்தில் நடித்த பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் உடல் பருமனாக இருப்பதால் உருவ கேலி பிரச்சனையை சந்தித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், உடல் தோற்றத்துக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்று சொல்வதை கேட்டு வருத்தப்பட்டு இருகிறேன்.

ஆனால் இப்போது அப்படி பேசுவதை கண்டு கொள்வதில்லை. ஆரோக்கிய பிரச்சனை மற்றும் வேறு காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் வரலாம். நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே பலர் என்னை ஏற்றுக்கொண்டு உள்ளன. தனுஷ் விஜய் சேதுபதி போன்ற ரசிகர்களின் செல்வாக்கும் முன்னால் அவர்களின் தோற்றம் ஒன்றுமே இல்லை. அவர்கள் தோற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் பிரபலத்துக்கும் தோற்றத்துக்கும் தொடர்பு இல்லை. மேலும் திறமை தான் முக்கியம். ஒல்லியாக இருந்தால் தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |