Categories
சினிமா தமிழ் சினிமா

“உலகநாயகன் மற்றும் சிம்பு இணையும் படம்” நான் தான் கண்டிப்பாக பண்ணுவேன்….. பிரபல தயாரிப்பாளர் உறுதி…..!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு சிம்பு நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சில காலங்கள் படம் எதுவும் வெளியாகாமல் தவித்து வந்த சிம்புவுக்கு மாநாடு படம்  மாபெரும் காம்பேக்காக அமைந்தது. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக ‌கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் கட்டாயமாக அந்த படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் சிம்பு மற்றும் கமல்ஹாசன் விரைவில் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |