Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! என்னா ரொமான்ஸ்…. நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் அசத்தல் வீடியோ….. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 3 படங்களும் தோல்வி அடைந்த நிலையில், எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய ஜவகர் மித்ரன் இயக்க, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் பாரதிராஜா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசானது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ள ஷோபனா கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா என்ற பாடல் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், பட குழுவினர் மேகம் கருக்குதா பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |