Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து போராடிய கிராம மக்கள்…. ஏன் தெரியுமா….?? போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்து நேற்று பணிகளை தொடங்குவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும்.

இதனையடுத்து 2 ஏக்கர் விவசாய நிலங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை கனரக வாகனங்களில் சந்தைக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது  தாசில்தார் தலைமையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என போலீசார் உறுதியளித்தனர். பின்னர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |